அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி

கோயம்புத்தூர்-13

முத்தமிழ் விழா-19


கனித்தமிழ் கணிதனின் குறியீடு

About Us

உடலாய் உயிராய் உயர்நல் உணர்வாய்

கனவாய் நினைவாய் கண்ணுள் விழியாய்

மண்ணாய் விண்ணாய் இடைநில் வளியாய்

எங்கும் நிறைந்த எம்மொழி செழிக்க

நிலவொடு வானும் நிழலொடு மண்ணும்

இரவொடு கனவும் இயலொடு இசையும்

நதியொடு கரையும் நாணொடு வில்லும்

எண்ணொடு தமிழும் என்றுமொன் றென

மொழியும் கலையும் எண்ணில் வடிய

தமிழும் அறிவும் தருவென செழிக்க

நாவும் தமிழால் நற்கதி யடைய

விரலும் வித்தையால் தூரிகை யாக

எண்திசை வழியும் மலரிட்டு அழைத்து

எழுபிறவிப் பயனை இப்பிறவி பெற்று

அறும்பொ ழுதும் அயரா துழைத்து

ஐந்திணை யெங்கும் அழைப்பு விடுத்து

நாற்படைப் போலொரு பெருந்திரள் திரண்டு

முக்கனி சுவையாய் கலைத்தமிழ் சமைத்து

ஈரேழு லோகமும் எந்தமிழே ஒலித்து

ஓராயிரம் அலையென பொங்கி எழுகிறது...!

முத்தமிழ் விழா-2019

முத்தமிழ்

இயற்றமிழ்

வான்மதியும் மெய்யுயிரும்
தனித்தியங்கின் அழகன்றோ… – கேளாய்
இலக்கண இலக்கியங்கள் ஒன்றியங்கின்
இயற்றமிழென்பாய் இந்நிலத் தெங்கும்

இசைத்தமிழ்

பசும் பாலொடு கலந்த
கொம்புத் தேன்நிகர் சுவையுண்டோ – அன்ன
பண்ணொடு தாளங் கலந்த இயற்றமிழே
என்றும் இனிக்கும் இசைத்தமிழென்ப

நாடகத்தமிழ்

வரப்பின் ஓரம் வாழ்நாள் கழித்து
வியர்வைச் சொட்ட உழைக்குங் கூட்டம்
ஓய்வு தணித்து உள்ளம் மகிழ
உருவாகிய தோர் நாடகத்தமிழ்

முகநூல் புலனம் மற்றும் இலவசக் குறுகலையை தோழமையாக்கி கொண்டும், முகம் மறந்து, உறவுகளை புறந்தள்ளி ஏடுகளும் மின்னியலில் அடங்கிடும் இந்த நவீன வாழ்வில் சங்கம் வைத்து தமிழை வளர்க்க வழியில்லை என்றாலும் மன்றம் வைத்து தமிழை வளர்த்திட எண்ணி திக்கெட்டிலும் தமிழினை பறை சாற்றிட வேண்டி எம்மாணவர் மன்றம் சார்பாக நடத்தப்படும் முத்தமிழ் விழா மென்மேலும் மெருகேறவும் மேலும் இந்த விழா பணிகளை ஊக்குவிக்கும் முனைவர் ஜெ.அன்பழகன் விஜய் அவர்களின் இலக்கியப் பணி சிறக்கவும் வாழ்த்துகிறேன்.

"தமிழ் மீது நான் கொண்ட தாகம்
மழை மீது நான் கொண்ட மோகம்"என்று எங்கோ நான் வாசித்த வரிகளை நினைவூட்டுகிறது. எம் மன்ற மாணவர்கள் இலக்கிய ஆர்வம். "மாற்றம் ஒன்றே நிலையானது" என்பது மனிதனுக்கு மட்டுமல்ல மொழிக்கும் பொருந்தும், உலகத்தின் வளர்ச்சிக்கேற்ப மொழியும் வளர வேண்டும் வளர்க்க வேண்டும் முப்பால் ஊட்டி மூளை வளர்த்த மூத்த மொழி தமிழ் வளர்த்தெடுக்கும் பணியை செவ்வனே செய்யும மாணவர்களை மனங் கனிந்து வாழ்த்துகிறேன்

கலை எனும் உலகின் நாயகர்களாம்
தமிழ் ஆளும் தரணியின் நாவலர்களாம்
பார் போற்றும் எம்மொழியின் காவலர்களாம்
கார் மேகம் போல் பொழியும் பாவலர்களாம்
மேடைகள் யாவும் சோடை போகாத சித்திரச் சாணக்கியர்களாம்
எம் மாணவர் மன்ற அச்சாரத் தூண்களாம்.

ஏகலைவர்கள், போகும் இடமெல்லாம் ஏறுமுகம் தான், எங்களைத் தொட்டுப் பார்த்தல் மிளிரும் நூறு முகம் தான்..


நேற்றைய தூமழை எங்கள் தோல்வியின் கதை
நாளைய பூமழை எங்கள் வெற்றியின் உரை
இன்றைய வியர்வை மழை எங்கள் முயற்சியின் விதை
அரும்பும் மலர்களை நோக்கி புதையும் விதைகள்...

பதிவிற்கு

வெற்றிகள் என்பவை கிளைகளின் இலைகள் அல்ல
அவை வேரின் மலர்கள்...
அரும்பும் மொட்டுகள் மலர அரியதோர் வாய்ப்பு ...

நிகழ்வுகள்கனல் தெறிக்கும் கலையரங்கில்
அனல் பறக்கும் பட்டிமன்றம்..
இயலோடு இசை வைத்து
விழிகளை வியக்க வைக்கும் எம் கலைகள்
விண்ணை முட்டும் எண்ணங்கள்
எம் விரல்கள் தூவும் வண்ணங்கள்
சிந்தைகள் சிதறாது தம் விந்தைகளை வெளிக்காட்டும் எம் சிந்து குயில்கள்


விதிமுறைகள்

பொது விதிமுறைகள்

1. பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களின் கல்லூரி அடையாள அட்டையை அவசியம் கொண்டு வருதல் வேண்டும்.
2. தங்கள் கல்லூரியில் இருந்து பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் விவரங்களை www.muthamizhvizha.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்தல் அவசியம்.
3.கலந்து கொள்பவர்கள் அனைவரும் பதிவு செய்யும் போது வழங்கப்படும் அடையாள அட்டையையும், கல்லூரி அடையாள அட்டையையும் விழா முடியும் வரை உடன் வைத்திருக்க வேண்டும்.
4. ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் நேர மேலாண்மையை தங்களுக்குத் தகுந்தவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
5. குழுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 10 ம் தேதிக்குள் muthamizhvizhagct@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அவசியம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
6. பங்கேற்பாளர்கள் அதிகமாகும் பட்சத்தில் தகுதிச் சுற்று பல கட்டங்களாக நடைபெறவும் வாய்ப்புண்டு.
7. முறைகேடு மற்றும் விதி மீறல்கள் தகுதி நீக்கத்திற்கு வழி வகுக்கும்.
8. அனைத்துப் போட்டிகளிலும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
9. பங்கேற்பாளர்கள் கல்லூரி வளாகம் மற்றும் கல்லூரி விடுதிக்குள் அதனதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காத பட்சத்தில் கல்லூரி நிர்வாகம் எடுக்கின்ற எந்த வித நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.


தொடர்புக்கு
பன்னீர் செல்வம் : 9655505440
பிரவேஷ் : 7397081948

விடுதி விதிமுறைகள்

1. போட்டியாளர்கள் தாங்கள் கொண்டு வரும் உடமைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.கல்லூரி நிர்வாகம் பொறுப்பாகாது.
2. நீங்கள் தங்கும் அறைககளில் உள்ள பொருட்கள் சேதமடைந்தால் அதற்கு ஏற்ப அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும்.
3. பங்கேற்பாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறைகளில் மட்டுமே தங்க வேண்டும்.மற்ற அறைகளுக்குச் செல்ல அனுமதி இல்லை.மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
4. உணவு வழங்கப்பட மாட்டாது.
5. பங்கேற்பாளர்கள் தேவையெனில் மின் இணைப்புப் பெட்டியைத் ( Junction box ) தாங்களே கொண்டு வர வேண்டும்.
6. பங்கேற்பாளர்கள்(ஆண்கள்) இரவு 9.00 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குத் திரும்பிட வேண்டும்.அதற்கு மேல் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
7. பங்கேற்பாளர்கள் தங்கள் கல்லூரி அடையாள அட்டை மற்றும் முத்தமிழ் விழா அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும்.
8. விதிமுறைகளை மீறும் பட்சத்தில் கல்லூரி நிர்வாகம் எடுக்கும் முடிவே இறுதியானது.
9. பெண்கள் மாலை 6.00 மணிக்கு மேல் கல்லூரி வளாகத்தில் இருக்க அனுமதி இல்லை. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குத் திரும்பிட வேண்டும்.அதற்கு மேல் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.தொடர்புக்கு
கோகுல் - 9384151762
மகேந்திரன் - 8012372936

அணுகவும்


இயற்றமிழ்

+91 9655505440

சித்திரத்தமிழ்

+91 7397081948

நாடகத்தமிழ்

+91 7868862451

விருந்தோம்பல்

+91 9384151762

முத்தமிழ் விழா-2019

பழந்தமிழாம் எம் தமிழே !
செந்தமிழும் பைந்தமிழும்
செழுந்தமிழாய் எழுந்தருளும்
முத்தமிழ்விழா